அதிக நேரம் வெயிலில் இருப்பது, தண்ணீர் அருந்தாமல் நீண்ட நேரம் வெய்யிலில் வேலை செய்வது வெப்ப பக்கவாதத்தை உண்டாக்கும்
கடும் வெய்யிலினால் உடலின் வியர்வை சுரக்கும் திறன் குறைவது, கனமான மற்றும் கறுத்த உடைகள் அணிவது இதற்கான காரணிகளாகும்
வயதானவர்கள், குழந்தைகள், இருதய நோயாளிகள் போன்றோருக்கு வெப்ப பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
அறிகுறிகள்
உடல் வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் ஆகுதல். அதிகப்படியான வியர்வை வெளியேற்றம்
தலைச்சுற்றல், மயக்கம், உணர்வாற்றல் குறைந்து காணப்படுதல்
உடல் பலவீனம், தசை பிடிப்பு, வாந்தி, தலைவலி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்
முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள்
உடனடியாக வெயிலிலிருந்து நிழலுக்கு செல்ல வேண்டும்; உடல் வெப்பத்தைக் குறைக்க அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு துடைத்தல்
மிதமான குளிர்ந்த நீரை அருந்தவும்; மிகவும் குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும், சிறிது உப்பு கலந்த நீர் அல்லது எலெக்ட்ரோலைட் பானங்கள் அருந்தலாம்
கழுத்து, கால்கள், கை, ஆகிய முக்கிய பகுதிகளை ஐஸ் பேக் கொண்டு குளிரச் செய்யவும்; பரிசோதனையின்றி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம்
மருத்துவ உதவிக்காக உடனே ஆம்புலன்சை அழைக்க வேண்டும்