Benefits of ABC juice

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, மினுப்பான சருமம், வலுவான கூந்தலைக் கொடுக்கிறது ABC ஜூஸ்.

தினமும் காலை ABC ஜூஸ் குடிப்பதின் நன்மைகள் இங்கே பார்க்கலாம்.

நெல்லி, பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் கலவையே இங்கு குறிப்பிடப்படும் ABC ஜூஸ்.

நெல்லிக்காயில் உள்ள விட்டமின்-சி, கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் (anti-oxidants) நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

இந்த ஜூஸ் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நம் குடலுக்கும் (gut health) சிறந்ததாகும்.

பீட்ரூட் நமது இரத்தத்தை சுத்தப்படுத்தும், நெல்லிக்காய் நச்சுத்தன்மையை நீக்கும். கேரட் கல்லீரலுக்கு சிறந்தது.

ABC ஜூஸ் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்தும்.

இந்த ஜூஸில் உள்ள விட்டமின், மினரல்கள் முகத்தில் உள்ள கருப்புகளை அகற்றி சருமத்தை பளிச்சிடச் செய்யும். முடியை வலுவாக்கும்.

இதில் காலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் நிறைந்தும் உள்ளதால் விரைவில் பசியெடுக்காது. ஆகையால் நாம் தேவையற்றதை சாப்பிடமாட்டோம்.

ஜூஸ் செய்யும் முறை

தலா ஒரு நெல்லி, பீட்ரூட், கேரட்டை நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்கலாம். சக்கரை சேர்க்க வேண்டாம்.