சம்மரில் வீடு கொதிக்கிறதா?
கோடை காலத்தில் வீட்டிற்குள் சென்றதும் சூடாக உணர்கிறீர்களா?
வீட்டைச் சற்றே குளிர்விக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
இரவு தூங்கும் முன்பு ஜன்னல்களைத் திறந்து வைக்கவும். இதனால் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வரும்.
பகலில் கிழக்கு நோக்கிய ஜன்னல்களை மூடவும். எதிர்த் திசை ஜன்னலை திறந்து வைக்கவும்.
இதனால் அதிகப்படியான வெப்பக்காற்று வீட்டிற்குள் புகுவதைத் தடுக்கலாம்.
அதிக வெப்பம், சூரிய ஒளியைத் தடுக்க வெளிர் நிற திரைகள் அல்லது தடுப்புகளை அமைக்கலாம். தெர்மல்/பிளாக் அவுட் திரைகள் சிறந்தவை.
வீட்டினை சுற்றி, ஜன்னல் ஓரங்களில் செடிகள், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம். இதனால் வீடு குளிர்ச்சியடையும்.
சீலிங் மற்றும் ஸ்டேண்டிங் மின் விசிறிகள் காற்றை சுழற்சி செய்ய உதவுகின்றன. மின் சிக்கனத்துடன் இது உங்கள் வீட்டை சற்று குளிரூட்டும்.
ஓவன், டிஷ்வாஷர் உள்ளிட்ட சாதனங்கள் வெப்பத்தை உருவாக்கும் என்பதால், அவற்றை மதிய நேரத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
ஐஸ் கட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை ஃபேன் அடியில் வைக்க குளிர்ந்த காற்று வீடு முழுக்க பரவும்.
மொட்டை மாடி தரை, மேல்மாடி வீடுகளின் சுவர்களின் வழியே வெப்பம் உள்ளே புகாமல் இருக்க நல்ல insulation பெயிண்ட் அடிக்கலாம்.
மொட்டை மாடி தரை, மேல்மாடி வீடுகளின் சுவர்களின் வழியே வெப்பம் உள்ளே புகாமல் இருக்க நல்ல insulation பெயிண்ட் அடிக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, வெயில் காலத்தில் உங்கள் வீட்டைக் குளிர்வாகவும், வசதியாகவும் வைத்திருக்கலாம்.