வியர்வை நாற்றம்: விடுபட டிப்ஸ்!

கோடைகால வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட சில டிப்ஸ்களை பார்க்கலாம்

கோடையில் தினமும் குளித்துவிடுங்கள். உடல் அதிகம் வேர்த்திருக்கும் போது கண்டிப்பாகக் குளிக்க வேண்டும்.

ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோப்பை உபயோகிக்கவும் இது வியர்வையின் போது உண்டாகும் பாக்டீரியா நம் உடலில் வளர்வதைக் குறைக்கும்.

குளித்த பின்பு உடலை நன்றாக ஈரப்பதம் இன்றி துவட்ட வேண்டும்.

தினமும் உங்கள் துணியை மாற்ற வேண்டும். அழுக்கான துணி உங்கள் வியர்வை நாற்றத்தை மேலும் அதிகப்படுத்தும்.

கோடை காலத்தின் போது துணிகள் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இயற்கையாக உற்பத்தியாகக் கூடிய காட்டன், லெனின், பட்டு போன்ற துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தத் துணிகள் லேசாகவும் காற்று உட்புகக் கூடியதாகவும் இருப்பதால் வியர்ப்பதைத் தடுக்கும்.

வியர்வை துர்நாற்றம் நீக்கி (Deodorants)மற்றும் வியர்வை எதிர்ப்பு ஸ்ப்ரேக்களை (antiperspirant ) உபயோகிக்கவும்.

அக்குள் முடியை ஷேவ் செய்து கொள்ளவும். அதிகப்படியான முடியால் பாக்டீரியாக்கள் வளரக்கூடும்.

நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும் அதனால் வியர்வை நாற்றம் குறையும்.

வெளியில் செல்லும்போது வாடை அடிக்கக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் குறிப்பாக பூண்டு, வெங்காயம் , மற்றும் அசைவங்களைத் தவிர்க்கவும்.

அதிகமாக ஸ்ட்ரஸ் ஆவதை தவிர்க்கவும், நீங்கள் டென்ஷன் அல்லது ஸ்ட்ரெஸ் ஆவதினால் வியர்வை சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கக்கூடும்.

மூச்சுப் பயிற்சிகள் யோகா ஆகியவை செய்து உங்கள் ஸ்ட்ரெஸ்ஸின் அளவை கட்டுக்குள் வைக்கவும்.