வீட்டின் காற்றோட்டத்தை சுத்தம் செய்யும் செடி வளர்க்கலாமா?

இந்திய வீடுகளுக்குப் பொருத்தமான, பராமரிப்பு குறைந்த, காற்றை தூய்மைப்படுத்தும் 6 இண்டோர் செடிகளை Kutty Storyல் பார்க்கலாம்...

நீண்ட, கூரான, பச்சை நிற இலைகள் கொண்டது. எந்த  வகையான சூழலையும் தாங்கும் தன்மை கொண்டது. இச்செடி வளர சிறிய வெளிச்சம் போதுமானது.

பாம்பு செடி (Snake Plant/Dracaena trifasciata)

அழகான சிறிய இலைகளைக் கொண்ட செடி. வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வளர்க்கலாம். இது நிழலில் கூட நன்றாக வளரும்.

அரேகா பனை (Areca Palm / Dypsis lutescens)

டேபிள்,  சுவர், தொங்கும் தொட்டிகளில் இதனை வளர்க்கலாம். மிகவும் எளியது. 

பணச் செடி (Money Plant / Epipremnum aureum)

கற்றாழையின் ஜெல், சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. இது வளர மிகக்குறைவான தண்ணீரே   போதுமானது.

கற்றாழை (Aloe Vera / Aloe barbadensis miller)

தொங்கும் தொட்டிகளில் வைக்க ஏற்றது. இதன் இலைகள் மிகவும் அழகாக இருக்கும். நிழல் மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில் வளர்க்க சிறந்தது.

பாஸ்டன் பாசலை (Boston Fern / Nephrolepis exaltata)

வெண்மையான பூக்கள் கொடுக்கும் அழகான செடி. நிழலிலும் நன்றாக வளரும்.

அமைதிப் பூ (Peace Lily / Spathiphyllum)

செடி வளர்ப்பது வீட்டின் அழகை மேம்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகள் செடி வளர்ப்பு, உணவு உருவாக்கத்தை அறிந்து கொள்ளவும் உதவும்.

செடிகள் வளர்க்க தகுந்த இடம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்வலர்களுக்கு இந்த ஸ்டோரியை ஷேர் பண்ணுங்க.