சித்திரை முதல் நாளான இன்று, உலகெங்கும் வாழும் தமிழர்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த தமிழ் ஆண்டினை விசுவாவசு வருடம் என்று அழைப்பர்.
இன்று காலை எழுந்ததும் அனைவரது வீடுகளிலும் கனி காணும் முறையினை கடைபிடிப்பர்
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை இறைவனுக்குப் படைத்து, காலை அதில் கண்விழித்து நடப்பு ஆண்டை தொடங்குவர்.
வீட்டில் சித்திரையில் பிறந்தோர் இருந்தால் அவர்களுக்காக வேண்டி பொங்கல் வைத்து வழிபடுவதும் வழக்கம்.
தமிழ்ப் புத்தாண்டான இன்று சமைக்கத் தகுந்த பாரம்பரிய உணவுகள்.
சக்கரைப்பொங்கல் மாங்காய் பச்சடி அவியல் பொரியல்
வடை பாயசம் சோறு துவரம் பருப்பு மற்றும் நெய்
சாம்பார் வேப்பம்பூ ரசம் தயிர் அப்பளம்
இன்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்தவாறு சமைத்து அனைவரும் கூடி ஒன்று மகிழ்வோம்.
இயற்கையை இறைவனாக வணங்கும் தமிழர் வழிபாட்டு முறையையும், பரம்பரத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்.
அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெற்று நலமுடன் வாழ நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.