உயிர்க் கொல்லி கதண்டு மக்களே உஷார்
கதண்டு என்று அழைக்கப்படும் குளவி வகை விஷத்தன்மை வாய்ந்தது; ஆங்கிலத்தில் Asian giant Hornet என்று அழைக்கப்படுகிறது.
இவை தென்னை, பனை போன்ற மரங்களில் பெரிய கூடுகட்டி கூட்டமாக வாழும்; இலைகள், மரத் துண்டுகள், மரக்கூழ் மற்றும் எச்சில் மூலம் கூடு கட்டுகின்றன.
பூச்சிகள் மற்றும் தேனீக்களை இவை உணவாக உட்கொள்கின்றன. இவை கருப்பு மற்றும் மஞ்சள் நிறக்கலவையில் காணப்படும்.
கதண்டு ஒரு உயிர்க்கொல்லி குளவி வகையாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கதண்டுகள் ஒன்றாகக் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
கதண்டில் Mandarotoxin எனும் நச்சுப்பொருள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது; இது மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.
இந்த நச்சுத் தன்மை தசை, நெஞ்சு மற்றும் மூச்சுக்குழாய் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.
கதண்டு கூட்டைப் பார்த்தால் உடனே தீயணைப்புத் துறை உதவியை நாடுங்கள்; நாமே அதனைக் கலைக்க முற்படக்கூடாது.
கூட்டைக் கலைக்க புகை போடுதல், தீ வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவை கூட்டமாகச் சேர்ந்து சுற்றி இருப்பவர்களைக் கடிக்க நேரிடும்.
கதண்டு கடியை பலர் சாதாரண குளவி கடி என்று நினைத்து, சுண்ணாம்பு, வெற்றிலை, மஞ்சள் கொண்டு வீட்டு வைத்தியங்கள் செய்து, மருத்துவ உதவியைத் தள்ளிப் போடுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
தமிழகத்தில் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கதண்டு கடித்தால் உடனே மருத்துவர் உதவியை நாடுங்கள்; இந்த விழிப்புணர்வு செய்தியை மற்ற மக்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.