கோடைகால முடி உதிர்வைத் தவிர்க்க சில டிப்ஸ்களை இந்த குட்டி ஸ்டோரியில் பார்க்கலாம்...
உங்கள் தலைக்கு எண்ணெய் அல்லது சீரம் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி முடி உதிர்வு தடுக்கப்படும்.
புரோட்டின் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதினால் முடி உதிர்வு கட்டுப்படும். உடலுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
வெயில் நேரத்தில் வெளியே செல்கையில் தலைமுடியைக் காத்துக் கொள்ள குடை முக்காடு அணியலாம்; தலைமுடியில் வெயில் அதிகம் படுவதால் முடி உதிர்வு அதிகமாகும்.
ஹீட்டர் , ஸ்ட்ரெய்ட்னர் போன்ற சாதனங்களை இந்த கோடை காலத்தில் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளவும். இவற்றால் முடி அதிகம் உடைந்து உதிர வாய்ப்பு.
செம்பருத்தி இலை, கற்றாழை வெந்தயத்தைக் கொண்டு தலைமுடிக்கு மாஸ்க் செய்து போட்டு, சிறிது நேரம் ஊறவைத்து தலைக்குக் குளித்தால், உடல் குளிரும், முடி உதிர்வைக் குறையும்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து தலைக்கு மசாஜ் செய்வதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் முடி உதிர்வும் கட்டுப்படும்.
இந்த கோடைகாலத்தில் அடிக்கடி தலைக்கு குளிப்பது சிறந்ததாகும். இது வியர்வை மற்றும் அழுக்கை நீக்கும். உடலைக் குளிர்விக்கும்.
முடி உதிர்வுக்கு மன அழுத்தமும் காரணியாக இருக்கலாம். தினமும் தியானம் செய்வதால் முடி உதிர்வு, மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுபடலாம்.