காரசார வாக்குவாதத்துடன் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்பட்ட விவகாரம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.