கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி 72 வயது முதியவரிடம் ரூ.5.50 கோடி மோசடி!

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபரிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி ரூ.5.50 கோடி சைபர் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடியை பறிக்க முயன்றபோது வங்கி அதிகாரிகளின் சந்தேகத்தால் மோசடி தடுக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.