கோவையில் கோர விபத்து மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்…!

நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனமும் டெம்போ டிராவலரும் மோதிக்கொண்ட விபத்தில், பாலத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.