கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு புகார்: 2-வது நாளாகத் தொடரும் சோதனை!
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரூ.300 மதிப்புள்ள புத்தகத்தை ரூ.1,395-க்கு வாங்கியதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, புத்தகக் கொள்முதல் ஆவணங்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் பில்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed