கோவையில் பயிர்க் காப்பீடு தொடக்கம்! கட்டணம், கடைசி நாள், தேவையான ஆவணங்கள் முழு விவரம்!

கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம், கொண்டைக்கடலை மற்றும் சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது. பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ் மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதியும், சோளத்திற்கு டிசம்பர் 16ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.