கார்த்திகை தீபத் திருவிழா: கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22 முதல் 24ஆம் தேதி வரை 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 24ஆம் தேதி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.