மயங்கி விழுந்த முதியவர் மீது பைக் மோதி பலி; போலீசார் தீவிர விசாரணை

கோவையில் சாலையில் மயங்கி விழுந்த 65 வயது முதியவர் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.