ATM இயந்திரத்தில் தவறுதலாக வந்த பணம்- வங்கி அலட்சியத்தால் வாலிபர் எடுத்த முடிவு…

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக வந்த ரூ.10,000-ஐ வங்கியிடம் திருப்பி ஒப்படைக்க முயன்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக இளைஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை அணுகினார்.