கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை ஆய்வுக் கூட்டம்…

கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திலேயே கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.