கோவை செல்வபுரத்தில் துணிகரம்! நகை பட்டறையின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு!

கோவை செல்வபுரத்தில் நகை பட்டறை உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பட்டறையின் கதவை உடைத்து 15 கிராம் தங்கம் மற்றும் 75 கிராம் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.