கோவையில் டன் கணக்கில் மருத்துவக்கழிவுகள் – பொதுமக்கள் அச்சம்!

கோவை உக்கடம் மேம்பாலம் அருகே வாய்க்காலில் ஏராளமான மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கழிவுகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து, அவற்றைக் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.