கோவையில் டன் கணக்கில் மருத்துவக்கழிவுகள் – பொதுமக்கள் அச்சம்!

கோவை: கோவை உக்கடம் மேம்பாலம் அருகே வாய்க்காலில் ஏராளமான மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, முறையாக அகற்றப்பட வேண்டிய மருத்துவக் கழிவுகளா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதிகளில் கொட்டப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.

Advertisement
Discarded medicine bottles and suspected medical wast

இந்தச் சூழலில், கோவை குறிச்சி குளத்தைத் தாண்டி உக்கடம் மேம்பாலம் ஏறும் பகுதியில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர்கள் மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களைக் கொட்டிச் சென்றுள்ளனர். வாய்க்காலில் ஏராளமான மருந்து பாட்டில்களும் மருந்துப் பொருட்களும் சிதறிக் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கொட்டப்பட்டுள்ள மருந்துகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, அவை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டவையா அல்லது காலாவதியான மருந்துகளா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. அவை மருத்துவக் கழிவுகளா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால், அவற்றின் தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஏற்கனவே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குப்பைகள், கோழிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை முறையற்ற வகையில் கொட்டுவதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது வாய்க்காலில் மருந்துப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

video

எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து, கொட்டப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தன்மையைக் கண்டறிய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும், அவற்றை முறையாக அகற்றுவதுடன், அவற்றைக் கொட்டிச் சென்றவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தாயின் அரவணைப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய வானதி சீனிவாசன்…

கோவை: கோவையில் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கினார் வானதி சீனிவாசன். கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத்தி சமாஜ் மண்டபத்தில், மக்கள் சேவை மையம் சார்பில் தாயின் அரவணைப்பில் வளரும் பெண்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...