வெள்ளலூர் குப்பைக்கிடங்கு நிலை மோசம்! 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவு

கோவை வெள்ளலூரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கழிவு மேலாண்மை தளத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.