கிணத்துக்கடவு கொடூரம்: இருவர் கைது; ஒருவருக்கு கை முறிவு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நண்பரை சுத்தியல் மற்றும் அரிவாளால் கொலை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வழக்கில், சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பியோட முயன்ற ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது.