கோவை: கோவையில் நண்பனை கொலை செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு பகுதி சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின்( 22) இவர் கல் உடைக்கும் கூலித்தொழில் செய்து வந்தார்.
மேலும் இவருடைய நண்பர்கள் விஷ்ணு (19)மற்றும் மாதேஷ் (22)மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அடிக்கடி குழுவாக மது அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர் மேலும் இந்த குழுவில் உள்ள அஸ்வின், 16 வயது சிறுவனை அடிக்கடி பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனவும், தங்களோடு இணைந்து மது அருந்த வேண்டாம் எனவும் தொடர்ந்து அறிவுரை கூறி வந்ததாக தெரிகிறது.
மேலும் மது அருந்தும் இடங்களில் சிறுவனை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து அஸ்வின் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு நண்பர் விஷ்ணுவின் வீட்டில் அஸ்வின் உறங்கியுள்ளார்.
அப்போது மது போதையில் வந்த மாதேஷ் மற்றும் சகோதரர் சுத்தியல் மற்றும் அறிவாளால் அஸ்வினை கொடூரமாக தாக்கி கொலை செய்து அதனை வீடியோ பதிவும் செய்துள்ளனர். மேலும் இதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Also Read: S.I.H.S Colony மக்களே… உங்களுக்கு திங்கட்கிழமை மின்தடை!
இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அஸ்வின் பிரேதத்தை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் 6 தனி படைகள் அமைத்து 15 பேர் கொண்ட போலீசார் கொலை செய்துவிட்டு தப்பித்து நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் அருகே இருந்த கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த மாதேஷ் கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Also Read: வெண்டைக்காய் விலை எப்படி இருக்கும்? விவசாயிகளுக்கு TNAU முக்கிய கணிப்பு
தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கோவையை உலுக்கிய இந்த கொடூர கொலை மக்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், கை முறிந்த நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





