வெள்ளைக் கம்பளம் போர்த்திய உதகை! உறைபனியால் உறைந்த புல்வெளிகள்! – VIDEO

உதகையில் வழக்கத்தை விட முன்கூட்டியே உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகப் பதிவான நிலையில், புல்வெளிகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து குட்டி காஷ்மீராகக் காட்சியளிக்கிறது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.