சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! கோவை போத்தனூர் வழியாக சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே கோவை போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் எழும்பூரில் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.