108 கல்வி சீரை கொண்டு வந்த மாணவர்கள்- கோவையில் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய அரசு பள்ளி…

கோவை: இடிகரை அரசு பள்ளிக்கு 108 கல்வி சீர்வரிசை உடன் வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளிக்கு வழங்கி அசத்தினர்.

கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் 1926ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி உள்ளது. இங்கு 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நூற்றாண்டு விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இதில் முதல் நிகழ்வாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள், பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், பேப்பர், மார்க்கர், நோட்புக், கடிகாரம், தம்ளர், ஸ்கேல், ஸ்டேப்ளர், பைல்கள், மேப்கள் என பள்ளிக்கும், மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டுவந்து வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இப்பள்ளி ஆரம்பிக்க உதவியவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.