HomeCoimbatore

Coimbatore

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில்...

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

ஓசூரில் நடைபெற உள்ள MSME சங்கமம் நிகழ்ச்சி…

கோவை: MSME சங்கமம் தொழில்துறை நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பான...

1600 விநாயகர் சிலைகள்- கல்லூரி மாணவிகள் உருவாக்கிய...

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,600 சிலைகளால் உருவான ‘ஓம்’ வடிவம் வடிவமைத்தனர் கல்லூரி மாணவிகள். விநாயகர் சதுர்த்தி ஒட்டி...

கோவை லாட்ஜ் அறையில் ராணுவ வீரர் அழுகிய...

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள லாட்ஜ் அறையில் ராணுவ வீரர் விஜயபூபதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக அறை திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து லாட்ஜ் நிர்வாகம் அறையை திறந்தபோது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானியத்தில் வேளாண் இயந்திரம்- கோவை மாவட்ட ஆட்சியரின்...

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பில் 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் நிலையில், உழவர் செயலி மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவில் விண்ணப்பிக்கலாம்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை ஆய்வுக் கூட்டம்…

கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் நடைபெற்றது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திலேயே கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு!

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஹெல்மெட், சீட் பெல்ட், வேகக்கட்டுப்பாடு மற்றும் சிக்னல் விதிகளை கடைபிடிக்க மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

மேட்ரிமோனியில் பெண் பெயரில் பேச்சு… பின்னர் டிரேடிங்...

கோவையில் மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் திருமண வரன் தேடிய 56 ஆண்களிடம் ரூ.3.07 கோடி மோசடி நடந்துள்ளது. போலி பெண் சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தி பணம் பறித்ததுடன், டிரேடிங் முதலீடு பெயரிலும் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்னா ஆட்டம்! கோவை கலெக்டர் அலுவலகம், கோர்ட்...

கோவை கலெக்டர் அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 1,500-க்கும் மேற்பட்ட மிரட்டல் மெயில்களை அனுப்பிய இவர், போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கோவையில் வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தப்...

கோவையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். 5 நாள் வேலை திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம், PLI உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

காரசார வாக்குவாதத்துடன் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்பட்ட விவகாரம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி...

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபரிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி ரூ.5.50 கோடி சைபர் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடியை பறிக்க முயன்றபோது வங்கி அதிகாரிகளின் சந்தேகத்தால் மோசடி தடுக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.