கோவை: கோவையில் மகனுடன் பைக்கில் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவைப்புதூரைச் சேர்ந்த சூரியநாராயணன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் கோவையில் தங்களது பணிகளை முடித்துக்கொண்டு, நேற்றிரவு புட்டுவிக்கி சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களின் பின்னால் வந்த டாக்ஸி எதிர்பாராத விதமாக, அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சூரியநாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் உடன் பயணித்த அவரது மகனுக்கு பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார்.
அங்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்த அவர், சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
வீடியோ காட்சிகள்
.
எஸ்.பி.வேலுமணி, கோவை விபத்து, கோவை செய்திகள், Coimbatore accident, SP Velumani, Coimbatore news, bike crash Coimbatore

