கோவை தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை: கோவை தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனியர் சூப்பிரண்டு தபால் அலுவலக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

கோவை தபால் பிரிவின் அரையாண்டு (31.12.2025 முடிவடையும்) ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 11 மணிக்கு கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே ஓய்வூதியம் தொடர்பான ஏதேனும் குறைகள் உள்ள தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை அணுகலாம். தங்கள் குறைகளை மனுவாக சீனியர் சூப்பிரண்டு தபால் அலுவலகம், கோவை 641 001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவோ, அல்லது docoimbatore.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மனுக்கள் வரும் 20ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

இண்டிகோ விமானங்கள் ரத்து- கோவையில் பயணிகளுக்கு கட்டணத்தொகை Refund…

கோவை: கோவையில் இண்டிகோ விமானம் ரத்து கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பயணிகள் புக்கிங் செய்த கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாகவே நாடு...

Video

Join WhatsApp