சபரிமலை சீசன்: கோவையில் நேந்திரன் பழத்திற்கு கிராக்கி!

கோவை: கோவையில் நேந்திரன் பழம் மற்றும் சில வகை வாழைப்பழங்களின் விலை கிலோக்கு ரூ.12 முதல் ரூ. 15 வரை உயர்ந்துள்ளது.

அதன் படி கடந்த மாதம் கிலோ ரூ.35க்கு விற்கப்பட்ட கதலி வாழை பழம், தற்போது ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, அக்டோபரில் ரூ.12 முதல் ரூ.13க்கு விற்கப்பட்ட நேந்திரன் வகை வாழை தற்போது ரூ.28 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாதம் விலை உயர்வு என்பது சாதாரணம். அய்யப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் காலத்தில் கேரளாவில் நேந்திரன் வாழைக்கு அதிக தேவை இருக்கும்.

கடந்த ஆண்டு சந்தையில் குறைந்த வரவு காரணமாக நேந்திரன் பழம் ரூ.60 வரை விற்கப்பட்டது. அதை ஒப்பிடும்போது தற்போது விலை குறைவு தான்.

அதேபோல மைசூரில் இருந்து அதிகளவு நேந்திரன் வரவு இருப்பதால் விலை அதிகமாக உயராமல் உள்ளது. இல்லையென்றால் கிலோவிற்கு ரூ.50 வரை உயர்ந்து இருக்கும்.

கடந்த வாரம் கிலோ ரூ.12 முதல் ரூ.13க்கு விற்கப்பட்ட நேந்திரன் வகை வாழை பழம் தற்போது ரூ.28 வரை உயர்ந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp