Cash On Delivery டார்ச்சர்- இளம் பெண்ணுக்கு நாள்தோறும் பார்சல் அனுப்பிய நபர் கைது…

கோவை: முன்னாள் பெண் ஊழியருக்கு Cash On Delivery டார்ச்சர் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புளியகுளம் பகுதியில் இயங்கி வந்த ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பார்சல்கள் Cash On Delivery என்று இவரது முகவரிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடங்கியது.

விசாரணையில் அந்த இளம் பெண் முன்னர் பணிபுரிந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனியின் நிறுவனர் சதீஷ்குமார் தான் இதனை செய்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி ஆபாசமான வார்த்தைகளை இளம் பெண்ணுக்கு புனைப் பெயராக சேர்த்து Cash on Delivery பார்சல் அனுப்பி தொந்தரவு செய்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் அவரது செல்போனை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News

Video

Join WhatsApp