கோவை: கோவையில் பூ வாங்குவது போல் நடித்து பெண் வியாபாரியிடம் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொப்பம்பட்டி அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி பாக்கிய லட்சுமி(60). இவர் இவர் கடந்த 4 ஆண்டுகளாக அங்குள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயில் எதிரே சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் ஒரு நபர் வந்தார். அவர் 40 ரூபாய்க்கு பூ கேட்டார்.
பாக்கிய லட்சுமி பூ எடுத்து கொண்டிருக்கும்போது, அந்த நபர் திடீரென அவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சியில் பாக்கிய லட்சுமி கூச்சல் போட்டார்.
அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர் நகையுடன் பைக்கில் தப்பி சென்று விட்டார். இது குறித்து பாக்கிய லட்சுமி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து பைக்கில் தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

