Coimbatore gold rate: கோவையில் இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.
தொடர் விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கம், கடந்த வாரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைக் கடந்து விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்தது. நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.99,520க்கு விற்பனை ஆகி வருகிறது.
இதனிடையே இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 விலை குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் ரூ.12,380க்கும், ஒரு பவுன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.400 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.10,330க்கும், ஒரு பவுன் ரூ.82,640க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.221க்கும், ஒரு கிலோ ரூ.2,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

