கோவை: கோவையில் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களின் செல்போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் கவுதம் (21). இவர் கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி கல்லூரியில் பிஇ படித்து வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி கவுதம், அவரது நண்பர்கள் 2 பேரின் செல்போன்களை தனது பேக்கில் வைத்து, கல்லூரி அறை முன்பு வாசலில் வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பேக்கில் இருந்த 3 செல்போன்களை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
இது குறித்து கவுதம் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது செல்போன்களை திருடியது சாய்பாபா காலனி ராமலிங்கம் நகரை சேர்ந்த ஷாகித் அப்ரிடி (26) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
மேலும், ஷகித்திடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யத போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.

