மருதமலை அருகே மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…

கோவை: மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழந்தது.

கோவை மருதமலை அடிவாரம் அருகே லெப்ரஸி காலனி எனும் குடியிருப்பு பகுதியில் நேற்று கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்த நிலையில் அதனை வனத்துறையினர் மீட்டு தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் லெப்ரஸி காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று அதன் குட்டியுடன் சுற்றி திரிந்த நிலையில் அதன், குட்டியை யாரும் இல்லாத வீட்டில் குட்டியை விட்டு விட்டு தாய் சிறுத்தை சென்றுள்ளது.

இந்நிலையில் சிறுத்தை குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் குட்டியை பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து அந்த குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அதே வனப்பகுதியில் உள்ள ஒரு குகை போன்ற இடத்தில் குட்டியை விட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் சிறுத்தையின் பக்கம் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் 5 மணி அளவில் கருஞ்சிறுத்தை குட்டியை சென்று வனத்துறையினர் பார்த்தபொழுது அங்கு இல்லாத நிலையில் வனத்துறையினர் குட்டியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபொழுது சுமார் 4.30 மணி அளவில் சிறுத்தை குட்டி வெளியே வந்தது பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் தணிக்கை செய்த நிலையில் அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சிறுத்தை குட்டியின் பிரேத பரிசோதனை நடைபெறும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயை பிரிந்த சிறுத்தை குட்டி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp