கோவை: கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்ற ஆசிரியர் இல்லத்தில் 103 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்ற பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகர் குனியமுத்த்தூர், நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறபடும் நிலையில் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

