கோவை: வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது சிகிச்சை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு காலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், விவசாய அணி மகாலிங்கம் மற்றும் மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக புறாக்களையும் பறக்கவிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

