கோவை: கோவையில் பென்சன் சட்ட திருத்தம் 2025 யை வாபஸ் பெற கோரி ஓய்வூதிர்கள் தர்ண போராட்டம் மேற்கொண்டனர்.
பென்சன் சட்ட திருத்தம் 2025 -வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மத்திய மாநில அரசு ஓய்வூதிர்கள் அன்று தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிவானந்த காலனியில் சிவில் போர்ம் ஆப் பென்ஷனர்ஸ் அசோசியேசன் (FORUM OF CIVIL PENSIONERS ASSOCIATION) சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள்
என்.அரங்கநாதன், எம்.தனுஷ்கோடி
ஏ.குடியரசு, டி.சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்தில் பென்சன் சட்ட திருத்தம் 2025 -வாபஸ் வாங்க வேண்டும், 8வது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில் ஓய்வூதிய மாற்றத்தை சேர்த்திட வேண்டும், புதிய தொழிலாளர் சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்யில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
சிவில் போர்ம் ஆப் பென்ஷனர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் டிஎஸ். வெங்கடாசலம், சுப்புராயன், கே.அருணகிரி, டி.எஸ்.வெங்கட்ராமன் எஸ்.என்.மாணிக்கம், வி.வெங்கட்ராமன், அருணகிரி, சி.வி மீனாட்சி சுந்தரம், நாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

