குடியரசு துணை தலைவர் வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை…

கோவை: குடியரசு துணை தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் 2 தினங்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப் புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் சேர்த்து தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீளமேடு, கே.எம்.சி.எச், சின்னியம்பாளையம், சிங்காநல்லூர், SIHS காலனி, இருகூர், ஏ.ஜி.புதூர், கொடிசியா வணிக வளாகம், சேரன்மாநகர், சிட்ரா,நேருநகர், காளப்பட்டி, ஹோப்ஸ், நீலாம்பூர், பந்தயசாலை மற்றும் நவ இந்தியா ஆகிய பகுதிகளுடன் அதன் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிக சிவப்பு மணிடலப்பகுதிகளாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் செயல்முறைகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 14.01.2026 அன்று காலை 08.00 மணி முதல் 15.01.2026 இரவு 10.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் விமானங்கள் (ட்ரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 14.01.2026 அன்று காலை 08.00 மணி முதல் 15.01.2026 இரவு 10.00 மணி வரையில் தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையினை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆனில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp