கோவை: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்றும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழா அன்று டெல்லியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க Brass Brand பள்ளி மாணவிகள் அணியில் தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவிகளை விட்டுவிட்டு கேரள மாணவிகளை தேர்வு செய்துள்ளதாக மாணவிகளும் பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா தினமன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதமர் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வில் நாட்டின் பெருமை பறைசாற்றும் விதமாஜ பல்வேறு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் பங்கேற்பதற்கு நாடு முழுவதும் தகுதி போட்டிகள் நடத்தப்பட்டு பின்னர் அணிவகுப்பு அணிகளானது தேர்வு செய்யப்படும்.
அதன்படி Brass Band அணிவகுப்பில் பள்ளி மாணவிகள் பங்கேற்பதற்கு நாடு முழுவதும் மாநில அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் தகுதி சுற்று போட்டிகளானது நடைபெற்றது. அதன்படி தென்னிந்திய அளவில் டிசம்பர் 12ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற்ற பகுதி போட்டியில் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் அந்த தகுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

அதில் தமிழ்நாடு அளவில் கோவை அவிலா கான்வென்ட் பள்ளி மாணவிகள் 29 பேர் மாநில அளவில் முதலிடம் பெற்று தென்னிந்திய தகுதி போட்டியில் பங்கேற்றனர். அதிலும் முதலிடம் பெற்றனர். அதற்கான சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவர்கள் 24ம் தேதி தேசிய அளவில் நடைபெறும் இறுதி தகுதிசுற்று போட்டியில் பங்கேற்பார்கள் அதில் வெற்றி பெற்றால் 26 ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பில் அவர்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி இவர்கள் தென்னிந்தியாவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் கோப்பைகள் எல்லாம் வழங்கப்பட்ட நிலையில் திடீரென இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் தான் முதலிடம் பெற்றது என வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் இதனால் தங்களின் ஆசைகள் கனவுகள் அனைத்தும் பொய்யாகி விட்டதாகவும் தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்று மாணவிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற அந்த தகுதிப்போட்டியில் முதலிடம் என்று தங்களை அறிவித்துவிட்டு திடீரென கேரள மாநிலம் தான் முதலிடம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள மாணவிகளும் பெற்றோர்களும் உடனடியாக தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இதில் தலையிட்டு தங்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தகுதி பெற்றிருந்தால் கூப்பிட்டிருப்பார்கள்.
கான்வென்ட் முக்கியமா இல்ல கேரளால ஆட்சிக்கு வர்றது முக்கியமா அப்படின்னு நினைச்சிருப்பாங்க😂😂😂
கிறிஸ்தவ கல்வி நிறுவனம்…