கோவை: கோவையில் ரூ.118 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைகளில், ரூ.118 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அரசு மற்றும் OSR (Open Space Reserve) நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி மண்டலங்கள்
மண்டல வாரியான நடவடிக்கைகளில், வடக்கு மண்டலத்தில் அதிக அளவில் 231 ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, 23,786.79 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.33.08 கோடி.
இதேபோல், மேற்கு மண்டலத்தில் 35 ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, 9,286.84 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலத்தின் மதிப்பு ரூ.48.85 கோடி.
மேலும், கிழக்கு மண்டலத்தில் 7 ஆக்கிரமிப்பு நிலங்களில் மொத்தம் 2,995 சதுர மீட்டர் நிலமும், மத்திய மண்டலத்தில் 4 ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு முறையே ரூ.24.18 கோடி மற்றும் ரூ.4.25 கோடியாகும்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் 4 ஆக்கிரமி நிலங்களில் 2,543 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.7.78 கோடி என.
இதில் OSR நிலங்களை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றும் பணிகள் தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நில விவரங்கள் அனைத்தும் மாநகராட்சி இணையதளம் மற்றும் ‘Namma Kovai’ செயலியில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. GIS (Geographic Information System) குழு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், பொதுமக்கள் வரைபட அடிப்படையிலான வசதியின் மூலம் OSR நிலங்களின் இருப்பிடம் மற்றும் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

