கோவை: கோவையில் நடைபெற்ற தாமரைக் கோல நிகழ்வில் நடிகை நமீதா கலந்து கொண்டார்.
கோவை க.க.சாவடி பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தாமரைக் கோலத் திருவிழாவில் நடிகையும் பாஜக கட்சியின் பிரமுகருமான நமீதா கலந்து கொண்டார்.

பாஜக மாநில மகளிர் அணி ஏற்பாட்டில் க.க.சாவடி பகுதியில் நேற்று மாலை இவ்விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பாஜகவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தாமரைக் கோலங்களை வரைந்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற பாஜக நிர்வாகியும் நடிகையுமான நமிதா ரேக்ளா வண்டி பயணம், வள்ளி கும்மி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு அவரது பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

