கோவை: நெஞ்சுவலி ஏற்பட்ட பயணியை பாதியில் இறக்கி விட்ட விவகாரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கு தண்டனை கொடுத்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர், அவ்வழியாக வந்த 1சி அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து பேருந்துக்குள்ளேயே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், அந்த பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவரை சாலையோரம் படுக்க வைத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரின் கவனத்திற்கு செய்தியாளர்கள் கொண்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பவன்குமார் உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து பயணியை நடுவழியில் இறக்கி விட்டது தொடர்பாக நடத்துனர் சரவணன், ஓட்டுனர் ஈசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இருவரின் செயல் உறுதியானதைத் தொடர்ந்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


Don’t show sexual images like this.