Header Top Ad
Header Top Ad

28ம் தேதி வானில் அபூர்வ நிகழ்வு: கோவை மக்களே Planet Parade-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

கோவை: வரும் 28ம் தேதி வானில் Planet Parade என்ற அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளதாகவும், இந்த நிகழ்வ இனி 2040ம் ஆண்டு தான் காண முடியும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வரும் 28ம் தேதி ஏழு கோள்கள், ஒரே நேரத்தில், ஒரே நேர்க்கோட்டில் தோன்றும் பிளானெட் பரேடு என்ற அபூர்வம் நிகழ உள்ளது.

நாசாவின் தகவலின்படி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தோன்றுகின்றன. இதனைத் தெளிவாகக் காணமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எப்போது காணலாம்?

ஏழு கிரகங்கள் ஒன்றாகத் தோன்றுவது மிக அரிய நிகழ்வாகும், வரும் 28ம் தேதி மாலை முதல், மேற்கு வானத்தை நோக்கிப் பார்த்தால், இந்த கிரகங்களைப் பார்க்கலாம்.

Planet Parade

✔ நகரின் வெளிச்சம் குறைந்த பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
✔ சூரியன் அஸ்தமனத்திற்குப் பின் மேற்கு வானத்தைக் கவனிக்கவும்.
✔ யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் போன்ற கிரகங்களைத் தொலைநோக்கியில் தெளிவாகப் பார்க்கலாம். மற்ற கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
✔ வானிலை நிலவரத்தை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement

வரும் 28ம் தேதி இந்த நிகழ்வைக் காண முடியாவிட்டால், அடுத்து இதுபோன்ற நிகழ்வு வரும் 2040ம் ஆண்டில் தான் நிகழும் என்று கூறப்படுகிறது. இத்தகவலை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து அவர்களையும் 28ம் தேதி தயாராக இருக்கச் சொல்லுங்கள்.

அதனால், மிஸ் பண்ணாம இந்த வருஷமே பாத்துடுங்க மக்களே. புகைப்படங்களை நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் உடன் பகிர்ந்திடுங்கள்.

Recent News