புரதமும், நார்ச்சத்தும் நிறைந்த ராஜ்மா மசாலா தயாரிக்கலாமா?

சுவையான மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ராஜ்மா மசாலா செய்முறையை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

கிட்னி பீன்ஸ் என்று அழைக்கப்படுபவை ராஜ்மா பீன்ஸ்கள். பார்ப்பதற்கு கிட்னி வடிவில் இருப்பதால் இதனை பலரும் கிட்னி பீன்ஸ் என்றே அழைக்கிறார்கள்.

இதில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, ஃபோலேட், மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த பயிர், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எலும்புக்கு வலு சேர்க்கும் உணவாகவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

வட இந்திய உணவுகளில் ராஜ்மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் முக்கிய இடம்பெறுகிறது. தனித்துவமான சுவையால் உலகம் முழுவதும் இது பிரபலமான உணவுப் பொருளாகும்.

Advertisement
ராஜ்மா மசாலா தயாரிப்பு முறைகள்

ராஜ்மா மசாலா தயாரிக்கும் முன் 8 முதல் 10 மணி அவற்றை ஊறவைத்து, பின்னர் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

தேவையான பொருட்கள்
  • வெங்காயம்
  • பூண்டு
  • இஞ்சி
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • மசாலா தூள்கள்

வேக வைத்த ராஜ்மாவுடன் மேற்கூறிய பொருட்களைச் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, ரொட்டி, மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.

விலை என்ன?

கோவையைப் பொருத்தவரை ராஜ்மா விலையானது அதன் தரம் மற்றும் அளவைப் பொருத்து, கிலோ ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனையாகிறது.

Recent News