Header Top Ad
Header Top Ad

வெள்ளியங்கிரி மலை மீது பறந்த த.வெ.க கொடி; போலீஸ் விசாரணை…

கோவை: வெள்ளிங்கிரி மலை மீது த.வெ.க கொடி பறக்க விட்ட விவகாரம் தொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக ஆனதில் இருந்தே, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்களாக இருந்தவர்கள் தொண்டர்களாக மாறி கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏற தற்போது வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் பலரும், இம்மலையில் பாதயாத்திரை சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டு வருகின்றனர்.

Advertisement

அப்படிச் சென்ற யாரோ ஒருவர் விஜய்யின் த.வெ.க கட்சிக்கொடியை, 7வது மலையில் நட்டி பறக்கவிட்டுள்ளனர். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொடியைப் பறக்கவிட்டது யார் என்பது குறித்து ஆலாந்துறை போலீசார் மற்றும் வனத்துறை விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வீடியோவை ஷேர் செய்து விஜய் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வனத்துறை தரப்பில் கூறியதாவது:

போளுவாம்பட்டி வனச்சரகம், போளுவாம்ட்டி பிளாக் 2 காப்புக்காடு, வெள்ளபதி பிரிவு பூண்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட 7 வது மலையில் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை தெர்வித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

Recent News