KYC படிவம் கேட்டு வாடிக்கையாளர்களை தொல்லை செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அழைப்புகள் வருகின்றன. அதில், KYC (அடையாள அட்டைகளை சமர்ப்பித்தல்) செய்து பல ஆண்டுகள் ஆனதால் உடனடியாக மீண்டும் KYC படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த காலத்திற்குள் KYC படிவம் சமர்ப்பிக்கவில்லை என்றால் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வங்கிகள் தொடர்ந்து அழைப்புகள் விடுத்து தொல்லை கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

புகாரை அடுத்து, KYC படிவத்தைக் கேட்டு வாடிக்கையாளர்களை தொல்லை செய்யக்கூடாது என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.