கோடை வெயில் டிப்ஸ்: கிர்ணி பழத்தின் பயன்கள் தெரிந்தால் கட்டாயம் சாப்பிடுவீங்க!

கோடை வெயில் டிப்ஸ்: கிர்ணி பழத்தின் பயன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிர்ணி பழத்தில் இரு வகைகள் உள்ளன.

Advertisement

மஸ்க் மிலன் ஒப்பீட்டளவில் பெரியதாகவும் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற தோலுடன் இருக்கும்.

இந்த ராக் மிலன் வகை கிர்ணி பழம் சிறியதாகவும் பச்சை நிற தோலுடனும் காணப்படும்.

இந்த இரண்டு வகை கிர்ணி பழங்களும் பெரும்பாலும் ஒரேமாதிரியான சத்துக்கள் கொண்டுள்ளன

இவை இரண்டும் நம் உடலுக்கு பல்வேறு பயன்களைக் கொடுக்கக்கூடியது. குறிப்பாக, வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தனித்து, புத்துணர்ச்சி கொடுக்கிறது.
கிர்ணியில் ஆரஞ்சு நிறக் கரு பகுதி ஊட்டச்சத்து நிறைந்ததாகும் .

Advertisement

விட்டமின்-ஏ, விட்டமின்-இ, விட்டமின்-சி, பீட்டா கரோட்டடின், பொட்டாசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துகள் கிர்ணி பழத்தில் உள்ளன.

குறிப்பாக, இதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வயது முதிர்வால் பார்வை மங்குதல் மற்றும் கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இது அருமருந்தாகவும், நோய்கள் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது

குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ( Low glycemic index) கொண்டுள்ள பழம் இது என்பதால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதனைச் சாப்பிடலாம்

கரையக்கூடிய நார்ச்சத்து (Digestive fibre) அதிகமாக இருப்பதால் வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்வதோடு செரிமான பிரச்சினைகளைத் தடுக்க உதவும். மேலும் இதில் உள்ள விட்டமின்-சி சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடியது.

இந்த பழத்தினை உட்கொள்வதால் சருமம் புத்துணர்ச்சி பெற்று பொலிவுடன் காணப்படும் .

கடந்த 2003ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கான்சஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகளை விட்டமின்-ஏ மூலம் ஓரளவு சரிசெய்ய முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கிர்ணி பழத்தில் நிறைந்துள்ள விட்டமின் வழியாக இந்த நன்மை அதிகமாகக் கிடைக்கும்.

கிர்ணி பழத்தை வெட்டிய உடனே சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தினை சாலடாகவும், ஃப்ரூட் ஜூஸ் போட்டும், பாலுடன் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி போலவும் உட்கொண்டு இதன் முழுப் பயன்களையும் பெற முடியும்.

கிர்ணி பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கோவையில் இந்த பழம் 3 கிலோ, 5 கிலோ ரூ.100 என்ற விலையில் விற்பனையாகிறது. உடனே வாங்கி குடும்பத்தினருடன் சாப்பிட்டு புத்துணர்வு பெற்றிடுங்கள்.

Recent News