கோவை வந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.

Advertisement

கோவை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் தலைமையில் திமுக தொண்டர்கள், முதலமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சென்ற அவர், அங்கிருந்து இன்று மாலை உதகை செல்கிறார். நாளை உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கும் முதலமைச்சர், நாளை கோவை வந்து, பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து நாளை மாலை 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Recent News