கோவை: கோவை ஐ.பி.எல் சூதாட்டம் நடத்திய 7 பேரைக் கைது செய்த போலீசார் ரூ.1.09 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
காந்திபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாட்டம் இருப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே அவர்களது அறையைச் சோதனையிட்டனர். அப்போது அங்கே லேப்-டாப் மற்றும் செல்போன்கள் இருந்தன.
மேலும் ரூ.1.09 கோடி பணமும் இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர்கள் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கிருந்த 7 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த பணம், கார்கள், 2 பைக்குகள் ,12 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.